கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிப்பதே ஒரு வரம். அதுவே வரம் என்றால் கமல்ஹாசனாகவே நடிப்பது என்பது? கிட்டதட்ட அதை நெருங்கிவிட்டார் த்ரிஷா. கமல் நடித்து ஒரு காலத்தில் பேய் ஹிட்டான படம் ‘கல்யாணராமன்’. ஸ்ரீதேவியை காதலிக்கும் அப்பாவி கமலை வில்லன் கோஷ்டிகள் கொன்று விடுவார்கள். அதற்கப்புறம் ஆவியாக வந்து அவர்களை பழி தீர்ப்பார் அந்த அப்பாவி கமல். இப்போது கோடம்பாக்கத்தில் கோலோச்சுவதும் ஆவிகள்தானே?
அந்த நம்பிக்கையில் மீண்டும் ‘கல்யாணராமன்’ படத்தை ரீமேக் செய்ய நினைத்தாராம் அப்படத்தின் தயாரிப்பாளரான பஞ்சு அருணாசலத்தின் மகன் சுப்பு பஞ்சு. 1979 ல் வெளிவந்த அந்த படத்தை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். ஆனால் ரீமேக்கில் சின்ன சின்ன மாற்றங்கள் உண்டு. அவர்கள் பாஷையில்தான் அது சின்ன மாற்றம். நிஜத்தில் அதுதான் பெரிய்ய்ய்ய்ய்ய மாற்றம். கமல் நடித்த வேடத்தை அப்படியே கதாநாயகியாக்கி அதில் த்ரிஷாவை நடிக்க வைக்க தீர்மானித்திருக்கிறார்கள். இதற்கு ஒப்புக் கொண்ட த்ரிஷா இரண்டு கோடியை சம்பளமாக கேட்க, அதற்கும் தயாராகிவிட்டது தயாரிப்பு தரப்பு.
இந்த படத்தின் கூடுதல் சிறப்பு- பழைய ‘கல்யாணராமன்’ படத்திற்கு கதை வசனம் எழுதிய அதே பஞ்சு அருணாசலம்தான் இந்த படத்தின் கதை வசனத்தையும் எழுதப்போகிறார். எவ்வளவு வயசானாலும் சிங்கம் சிங்கம்தான். அதிருக்கட்டும்… ‘கமல் அதிர்ச்சி’ என்றெல்லாம் தலைப்பு வைச்சாச்சே? அந்த விஷயம் என்ன?
இப்படியொரு முயற்சி நடப்பதை அறிந்த கமல், தன் கேரக்டரில் த்ரிஷா நடிப்பதை சற்று ஆச்சர்யத்தோடும் அதிர்ச்சியோடும் ஏற்றுக் கொண்டாராம்.

0 comments:
Post a Comment