கமலை இயக்க வருகிறார் பிரபுதேவா?
கமலின் அடுத்தடுத்தப் படங்கள் இப்போது அனைவராலும் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றன. முதலில் உத்தமவில்லன் ஏப்ரல் மாதம் உறுதியாக வெளிவருகிறது. மோகன்லால், மீனா மலையாளத்தில் நடித்து பெரும் வெற்றியடைந்த ‘திருஷ்யம்’ படம் இப்போது தமிழில் கமல், கௌதமி நடிக்க ‘பாபநாசம்’ எனும் பெயரில் வெளி வர உள்ளது.
ஆனால் அது எப்போது வெளிவரும் எனத் தெரியவில்லை இது போக ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படவில்லை இந்த 3 படங்கள் மட்டுமல்லாமல் கமல் நடிக்கப் போவதாக அவ்வப்போது மேலும் ஒரு படம் கூறப்படுகிறது அது இந்தியில் வெளியாகி பல கோடிகளை அள்ளிச் சென்ற அமீர்கான் நடித்த பிகே படத்தின் தமிழ்ப் படைப்பு அதற்காகக் கமலிடம் பேச்சு நடந்து வருகிறது.
இவ்வளவு கமல் படங்கள் வர இருக்கும் வேளையில்தான் அவருடைய அடுத்த புதிய படத்திற்கான வேலையும் நடந்து வருகிறது. படத்தின் பெயர்கூட தெரியாத அதன் இயக்குநர் மட்டும்தான் இப்போது பேசப்படுகிறது. அவர் நடிகர் பிரபுதேவா ஆம் அவர்தான் கமலின் அடுத்த இயக்குநர்

0 comments:
Post a Comment