
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளும், ஆக்சன் காட்சிகளும் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் 60% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், மீதி படப்பிடிப்பை மிக விரைவில் முடித்துவிட்டு விஜய் பிறந்த நாளான ஜூன் மாதம் 22ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் 'புலி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இதே நாளில்தான் 'தல 56' படத்தின் ஆரம்பவிழாவும் நடைபெறும் என செய்திகள் கூறுகின்றன. 'தல 56 படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் சிறுத்தை சிவா என்பது உறுதியாகிவிட்டது என்பதை ஏற்கனவே அறிவோம். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், பிரபு உள்பட பலர் நடித்து வரும் 'புலி' படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். சிம்புதேவன் இயக்கி வரும் இந்த திரைப்படத்தை பி.டி.செல்வகுமார் தயாரித்து வருகிறார்.
0 comments:
Post a Comment