Tuesday, March 24, 2015


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' பிரச்சனை தற்போது முழுவதுமாக தீர்ந்து விட்டதை அடுத்து அவர் தனது அடுத்த படம் குறித்த ஆலோசனையில் இறங்கியுள்ளார். லிங்கா' போல் மாறுபட்ட ரிசல்ட்டை விரும்பாத ரஜினி, தனது அடுத்த படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக்க இருக்க வேண்டும் என்றும், லிங்கா குறித்து பல்வேறு கருத்துக்களை கூறியவர்களின் வாயை அடைக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே தனது வயதிற்கு தகுந்தால் போல் அதே நேரத்தில் சுவாரசியமாகவும் இருக்கும்படியான கதைகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது அடுத்த படம் ஒரு முழுநீள நகைச்சுவை படம்தான் என்பதை அவர் முடிவு செய்துவிட்டதாகவும் சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்தது. இதை நிரூபிக்கும் வகையில் தற்போது சூப்பர் ஸ்டார், பிரபல நகைச்சுவை நடிகரும் நாடக இயக்குனருமான கிரேஸி மோகனை சமீபத்தில் சந்தித்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கிரேஸி மோகன் திரைக்கதையில் உருவான 'அருணாச்சலம்' படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமின்றி ரஜினியின் நகைச்சுவை படங்களான தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு, குரு சிஷ்யன், போன்ற படங்கள் ரசிகர்களிடம் ஆக்சன் படங்களுக்கு நிகராக ஹிட் ஆகியுள்ளதால் ரஜினியின் அடுத்த படம் இதுபோன்ற ஒரு நகைச்சுவை படமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment