Tuesday, March 24, 2015

 படங்கள் ரிலீசை முறைப்படுத்த கோரிக்கை
கோலிவுட் பிலிம் ரோலிலிருந்து டிஜிட்டல் மாற்றத்துக்குள்ளான பிறகு பட தயாரிப்பில் புதிய எழுச்சி உண்டாகி இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டிருந்த படப்பிடிப்புக்கள் தற்போது கிராமத்துக்கு கிராமம் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு வருடத்தில் 100 தமிழ் படங்கள் மட்டுமே ரிலீசான காலம்போய், இப்போது 200 படங்கள் ரிலீசாகிறது. திரை அரங்குகளுக்கு வரும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பண்டிகை காலங்களில் 5 படம், 6 படம் என்று ரிலீஸ் ஆகிக்கொண்டிருந்தது. பிளஸ் டு, 10வகுப்பு தேர்வு, உலககோப்பை கிரிக்கெட் என பரபரத்துக்கொண்டிருக்கும் இந்த மார்ச் மாதத்தில் மட்டும் 20க்கு மேற்பட்ட படங்கள் திரைக்கு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நாளில் 10 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. அகத்தினை, இரவும் பகலும் வரும், ஆயா வட சுட்ட கதை, கடவுள் பாதி மிருகம் பாதி, கள்ளப்படம், காலகட்டம், மூச், பட்ற, திலகர், வெத்து வேட்டு என படங்கள் கடந்த வாரம் வரிசை கட்டின. ‘படங்களை எளிதாக எடுத்து எளிதாக அதை ரிலீஸும் செய்துவிடுகிறார்கள். ஆனால் அப்படம் திரைக்கு வருகிறது என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் போதுமான புரமோஷன் செய்யாமல் வெளியிடும்போது அவை வந்த சுவடு தெரியாமல் போய்விடுகிறது. இதனை முறைப்படுத்தும் நடவடிக்கை சம்பந்தப்பட்ட சங்கங்கள் எடுக்க வேண்டும்'என்று இயக்குனர் ஆர்.கண்ணன் கருத்து தெரிவித்தார்.

0 comments:

Post a Comment