தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த விருது குழுவுக்கு படத்தை முறையாக அனுப்பியிருந்தால், நமக்கும் கிடைத்திருக்குமே என்று கவலை கொண்டிருக்கிறாராம் அப்படத்தின் டைரக்டர் வசந்தபாலன். தயாரிப்பு செலவு, விளம்பர செலவு, எக்ஸ்ட்ரா செலவு என்று சுமார் 22 கோடியை விழுங்கிய படம் அது. போனது மலையளவு. வந்தது கூழாங்கல் அளவு என்று கணக்கு போட்டு கணக்கு போட்டு கைவிரல் தேய்ந்ததுதான் மிச்சம் தயாரிப்பாளர் சசிகாந்துக்கு.
காவிய தலைவனை விருது கமிட்டிக்கு அனுப்பியிருக்கலாம்தானே? ஏன் அனுப்பவில்லை? அந்த ஆசை வசந்தபாலனுக்கு இருந்தது. எந்த விருது கமிட்டிக்கு படம் அனுப்பப்பட வேண்டும் என்றாலும், தயாரிப்பாளர் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்காது. சென்சார் சர்டிபிகேட்டுடன் படத்தின் பிரதிகளையும் அனுப்பி வைக்க வேண்டும். அதுமட்டுமல்ல, முழு படத்திற்கும் ஆங்கிலத்தில் சப் டைட்டில் பதிவு செய்து அனுப்ப வேண்டும். இவை எதுவும் தயாரிப்பாளரின் சுண்டு விரல் சம்மதமின்றி கூட நடந்துவிட முடியாது.
தனது ஆசையை அவர் சசிகாந்திடம் சொல்ல, ‘22 கோடியை இப்படி அநியாயமா தொலைக்க வச்சுட்டீங்க. இப்ப விருது ஒண்ணுதான் குறைச்சல். போய் ஆக வேண்டிய வேலையை பாருங்க’ என்று கூறிவிட்டாராம். இன்று அறிவிக்கப்பட்ட விருது பட்டியலை பார்த்ததும் எல்லாருக்கும் தோன்றுகிற வருத்தம்தான் வசந்தபாலனுக்கும் தோன்றியதாம்.
அழுதழுது ‘கேவிய’ தலைவன் ஆகிவிட்டான் காவிய தலைவன்!

0 comments:
Post a Comment