Tuesday, March 24, 2015

சூப்பர் ஸ்டார், சிங்காரவேலனை சந்திக்க என்ன காரணம்? - Cineulagam
லிங்கா படத்தின் வெற்றியை சில விநியோகஸ்தர்களே பறித்து விட்டார்கள் என்று இப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் கூறினர். இதில் முக்கியமாக சிங்காரவேலன் தான் முன் நின்று இந்த போராட்டத்தை செய்து வந்தது அனைவரும் அறிந்ததே.
இதற்கு நஷ்ட ஈடாக ரூ 10 கோடி ரஜினி தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே சிங்காரவேலன் சங்கு சுட்டாலும், வெண்மை தரும் என்று பல வசனங்களுடன் ரஜினியை புகழ்ந்து பத்திரிக்கையில் விளம்பரம் வெளியிட்டார்.
தற்போது அவர், ரஜினியை சந்திக்க வாய்ப்பு கேட்க, சூப்பர் ஸ்டாரும் அனுமதி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது தான் ரஜினி மனசு, என்று திரைத்துறையில் பலர் சூப்பர் ஸ்டாரை புகழ்ந்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment