Wednesday, March 25, 2015




கும்கி படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தவர் லட்சுமி மேனன். தொடர்ந்து இவர் நடித்த அனைத்து படங்களும் குடும்ப பாங்கான கதைகள்தான்.


தற்போது இவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் கொம்பன் படத்திலும் தனது தாவணி மற்றும் சேலை கட்டிக் கொண்டு குடும்ப குத்துவிளக்காகதான் நடித்துள்ளார். தொடர்ந்து ஒரே மாதிரியான காஸ்ட்யூமைப் பார்த்து அலுத்து விட்டதாக தெரிவித்துள்ளார் லட்சுமிமேனன்.
இதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ளப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, நான் நானாக இருக்கிற மாதிரி ரொம்ப கேஷ்வலான கேரக்டர்கள்ல நடிக்கணும்னு ஆசை. ஒளிஞ்சு நின்னு போன் பேசுறது, தலை நிறைய மல்லிகைப் பூ வெச்சு மாமாவைப் பார்த்து சிரிக்கிறது.
எல்லா படமும் கிராமத்துப் படமாவே இருந்தா எப்படி? ‘விண்ணைத்தான்டி வருவாயா’ படத்தில் த்ரிஷா மேடத்துக்குக் கொடுத்த கேரக்டர் மாதிரி எனக்கு ஒரு கேரக்டர் கொடுங்களேன் ப்ளீஸ் என இயக்குனர்களுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார்.’

0 comments:

Post a Comment