தனுஷ், அமிதாப் பச்சன் நடித்த ஷமிதாப் படத்தில் கதநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன்.
இவர் மும்பையில் நடந்த லாக்மீ பேஷன்வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதன்முதலாக ராம்ப் வாக் செய்தார். ஆனால் அக்ஷரா அணிந்து வந்த ஆடை அவருக்கு சற்றும் பொருந்தவில்லை என்று ஃபேஷன் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதோடு அவர் அணிந்த ஆடையைப் பற்றிக் கூட பேஷன் விமர்சகர்கள் விமர்சித்துள்ளார்களாம். ஆனால் அக்ஷராவோ, இந்த ஃபேஷன் டிசைனர்தான் தன்னுடைய பேவரட் என்று தெரிவித்துள்ளார். அக்கா ஸ்ருதிஹாசன் அளவிற்கு அக்ஷரா இல்லை என்று அவர்கள் வெளிப்படையாகவும் சொல்ல ஆரம்பித்து விட்டார்களாம்.
0 comments:
Post a Comment