தெலுங்கில் ஐட்டம் டான்ஸிற்கு பெயர் போனவர் சார்மி. இவர் தமிழில் சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தில் நடித்தவர். அதன்பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். அந்த படங்கள் அவருக்கு கைக்கொடுக்காததால் தெலுங்கு பக்கமே கரை ஒதுங்கி விட்டார்.
தற்போது விக்ரம் நடித்து கொண்டிருக்கும் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் முக்கியமான பாடலில் நடனமாடியுள்ளார். புரி ஜெகநாத் இயக்கும் தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். ஆர்வ கோளாரில் தெலுங்கு புத்தாண்டான யுகாதி தினத்தன்று தனது இணையதள பக்கத்தில் நீச்சல் உடையுடன் ஜூஸ் கிளாஸ் ஒன்றுக்கு முத்தமிட்டபடி தோன்றும் ஸ்டில் வெளியிட்டு யுகாதி வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார் சார்மி.
இந்த புகைப்படம் பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. யுகாதி என்பது பாரம்பரிய முறைப்படி கொண்டாடும் விழா அதற்கு நீச்சல் உடையில் நின்றபடி வாழ்த்து கூறுவதா? என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து சார்மிக்கு எதிராக குரல் எழுப்பி உள்ளனர். இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் சார்மி.
0 comments:
Post a Comment