Wednesday, March 25, 2015


திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருந்த போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. அதன்பிறகு திரையுலகிற்கு முழுக்கு போட்டார்.


தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற மலையாள படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு 36 வயதினிலே என்று பெயர் வைத்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல்கள் வருகிற 29- ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு தன் சகாக்களை முடுக்கிவிட்டிருக்கிறார் சூர்யா. இசைவெளியீடு நடைபெற்ற சில நாட்களில் படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளார் சூர்யா. அதோடு சென்னை ஏரியாவில் தானே வெளியிட உள்ளார். தன் மனைவி மறுபிரவேசம் செய்யும் படம் என்பதால் எப்படியாவது 100 நாட்கள் ஓட்ட வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை போட்டு வருகிறாராம்.

0 comments:

Post a Comment