Sunday, March 1, 2015


சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமான 'பிகே' என்ற படத்தை கொடுத்த அமீர்கான், அடுத்து தனது மனைவியோடு ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த விளம்பரப்படத்தில் அமீர்கான் தனது மனைவியோடு ஒரு மணி நேரம் மட்டுமே நடித்ததாகவும், அதற்கு அந்த விளம்பர நிறுவனம் அவருக்கு ரூ.2 கோடி சம்பளம் கொடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யாராய், சயீப் அலிகான் - கரீனா கபூர், ஷாருக்கான் -கெளரி கான் ஜோடிகளும் விளம்பரப்படத்தில் நடித்து வந்தாலும், அமீர்கான் பெற்றுள்ள இந்த தொகை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வீட்டு உபயோகப்பொருள் ஒன்றுக்காக மனைவி கிரண் ராவுடன் அமீர்கான் நடித்த இந்த விளம்பரம் அவருடைய 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சிக்கு ஸ்பான்சராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment