Sunday, March 1, 2015


ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மனி, சூர்யாவின் 24 ஆகிய தமிழ் படங்களுக்கும் மூன்று இந்தி மற்றும் இரண்டு ஆங்கில படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இவ்வளவு பிசியான பணிகளுக்கு நடுவே இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், திரைக்கதை மற்றும் படத்தயாரிப்பிலும் ஈடுபடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் குறித்த ஒரு குறும்படம் வெளியானது. இதில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், 'இசையமைப்பதில் மட்டுமின்றி வேறு துறையிலும் சாதிக்க வேண்டும் என்ற தன்னுடைய எண்ணம் விரைவில் நிறைவேற உள்ளதாகவும், விரைவில் ஒரு படத்திற்கு திரைக்கதை எழுதி அதை தானே தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இசையமைக்கும் பணிக்காக பல்வேறு பயணங்கள் மேற்கொண்ட போது, தான் சந்தித்த பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மனிதர்களைப் பார்த்தபோது ஒரு கதை தோன்றியதாகவும், அந்த கதைக்கு தற்போது திரைக்கதை வடிவம் கொடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இசைப்பயணம் மட்டுமின்றி புதிய பாதையில் பயணம் செய்யவிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment