Sunday, March 1, 2015

பிசாசு பட இயக்குனர் மிஷ்கின் அவர்களின் உதவியாளர் வடிவேல் இயக்கிய 'கள்ளப்படம்' படத்தை அவரே தனது சொந்த நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் என்பதை சமீபத்தில் பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி படக்குழுவினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட கள்ளப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதை தொடர்ந்து மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ள திரைப்படவிழாவிலும் இந்த படம் திரையிடப்படவுள்ளது.

ரிலீஸ் ஆவதற்கு முன்பே சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள இந்த படத்தில்  ஸ்ரீராம சந்தோஷ், லட்சுமி பிரியா சந்திரமெளலி உள்பட பலர் நடித்துள்ளனர். 'கே இசையமைக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவையும், கெளஜின் எடிட்டிங் பணியையும் செய்கின்றனர்.

இந்த படத்தின் ஒருசில காட்சிகளை மிஷ்கின் இயக்கி கொடுத்ததாக கூறப்படுகிறாது. மேலும் இந்த படத்திற்கு யூ' சர்டிபிகேட் சமீபத்தில்  கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மே மாதம் இந்த படம் ரிலீஸாகலாம் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment