Sunday, March 1, 2015


தனுஷ், அம்ரியா, கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அனேகன்' திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரீ எண்ட்ரியான கார்த்திக் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாகவும், தன்னுடைய ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்த தொடர்ந்து நடிப்பில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல் கட்டமாக கார்த்திக் நடிப்பில் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான 'அமரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். கே.ராஜேஷ்வர் இயக்கிய இந்த படத்தில் பானுபிரியா, ராதாரவி, விஜயகுமார், ஷம்மி கபூர், பிரதாப் போத்தன், மஞ்சுளா விஜயகுமார், சில்க் ஸ்மிதா உள்பட பலர் நடித்திருந்தனர். கார்த்திக்கின் அதிரடி ஆக்சன் படமான அமரன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமீபத்தில் அவர் இயக்குனர் ராஜேஷ்வருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அமரன்' படத்தில் கார்த்திக் 'வெத்தல போட்ட ஷோக்குல' என்ற பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'அமரன்' இரண்டாவது பாகத்திலும் பானுப்ரியா ஜோடியாக நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment