நடிகர் விஷ்ணு, நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னையின் அணியில் நட்சத்திர வீரர். இவருடைய அதிரடியில் சென்னை அணி ஏகப்பட்ட வெற்றிகளை ருசித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின் போது விஷ்ணுவுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, சிகிச்சை மூலம் அவருடைய வலது கையில் மெட்டல் பிளேட் வைக்கப்பட்டது. பிளேட் வைத்த கையோடு அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு வரை நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்தார் விஷ்ணு.
இந்நிலையில், தற்போது அவரது வலது கையில் பொருத்தப்பட்ட மெட்டல் பிளேட் நீக்கப்பட்டு விட்டதாக விஷ்ணு தெரிவித்துள்ளார். இது விஷ்ணுவுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தனது கையில் பொருத்தப்பட்டு, தற்போது நீக்கப்பட்ட மெட்டல் பிளேட்டை புகைப்படம் எடுத்தும் வெளியிட்டுள்ளா

0 comments:
Post a Comment