Thursday, March 5, 2015

tapse-600x300
கடவுள் அனுமதித்தால் கற்பழிப்பு குற்றவாளியை நானே கொலை செய்வேன் என்று நடிகை டாப்சி ஆவேசமாக கூறினார்.
டெல்லியில் 2012–ல் மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு அவரை குற்றுயிராக வெளியே தூக்கி வீசிவிட்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் அவர் உயிர் இழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கற்பழிப்பு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அந்த பஸ்சை ஓட்டிய டிரைவர் முகேஷ் சிங்கும் கைதானார். இவர்கள் ஜெயிலில் தூக்கு தண்டனையை எதிர் நோக்கி காத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் லண்டனை சேர்ந்த பி.பி.சி.4 குழுவினர் ஜெயிலுக்கு சென்று முகேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்தனர். அப்போது மாணவி கற்பழிப்புக்கு உடன்பட்டு இருந்தால் உயிர்ப்பலி நிகழ்ந்து இருக்காது என்று பேட்டி அளித்து இருந்தார். இந்த பேட்டி பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து இப்பேட்டியை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. முகேஷ்சிங் பேட்டிக்கு நடிகை டாப்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறும் போது, முகேஷ்சிங் கருத்து அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கடவுள் என்னை ஒரே ஒரு கொலை செய்ய அனுமதித்தால் நானே கற்பழிப்பு குற்றவாளியை கொலை செய்து என் கோபத்தை தீர்த்துக் கொள்வேன்.
குற்றம் செய்தவர்கள் திருந்த வேண்டும் என்றுதான் ஜெயிலுக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால் முகேஷ் சிங் போன்றவர்கள் திருந்த மாட்டார்கள். இவர்கள் உயிரோடு இருக்க கூடாது என்றார்.

0 comments:

Post a Comment