Thursday, March 5, 2015



நடிகைகள் எப்பொழுதுமே தங்களது உடம்பை ஸ்லிம்மாக வைத்து கொள்ள தீவிரமாக முயற்சி செய்வது வழக்கம். ஆனால் நடிகை அனுஷ்கா தலைகீழ். 
அவர் தற்போது 20 கிலோ அளவிற்கு உடல் எடையை கூட்ட முயற்சி செய்து வருகிறார். அதாவது அவர் நடிக்க உள்ள சைஸ் ஜீரோ என்ற படத்திற்காக தான் உடல் எடையை அதிகரிக்க உள்ளார். அதற்காக அவர் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். ஸ்பெஷல் டயட்டிஷியனின் ஆலோசனைகளை பின்பற்றி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். பிரகாஷ் கொவெலமுடி இயக்குகிறார். கீரவாணி இசை அமைக்கிறார். பி வி பி நிறுவனம் தயாரிக்கிறது.

0 comments:

Post a Comment