மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு என படங்களில் வளைய வருபவர் நித்யா மேனன். தமிழில் 180 படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து ‘வெப்பம்’, ’மாலினி 22 பாளையம்கோட்டை’, ‘ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை இப்படி தமிழில் ஓரிரு படங்களிலேயே இதுவரை தலைகாட்டியுள்ளார்.
மலையாளத்தில் சமீபகாலமாக ‘பெங்களூரு டேஸ்’,உஸ்தாத் ஹோட்டல்’ என ஹிட்டடித்தது. தற்போது தமிழிலும் மணிரத்னம் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் தொடர் 2 ஹிட் படங்கள், மற்றும் மணிரத்னம் படமென புக்கானதால் சம்பளத்தை தடாளடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தியாகராஜன் இந்தியில் ஹிட்டடித்த ‘குயின்’ படத்தின் தென்னிந்திய உரிமையை வாங்கியுள்ளது நாம் அறிந்ததே. இப்போது வரை அப்படத்தில் யார் நடிகை என முடிவாகாமலேயே உள்ளது. இந்நிலையில் நித்யாமேனனிடன் கேட்டதற்கு 2 கோடி சம்பளம் வேண்டும் என கேட்டுள்ளாராம். இத்தணைக்கும் மலையாளம் தவிர்த்து மற்ற மொழிகளில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் ஏதும் இல்லை. இந்நிலையில் இவர் 2 கோடி சம்பளம் கேட்கும் அளவிற்கு என்ன ஹிட் கொடுத்துவிட்டார் என மற்ற மொழி படாதிபதிகள் புலம்பத் துவங்கியுள்ளனர்.
2கோடி கொடுத்து நித்யா மேனன் எனில், ஸ்ருதி ஹாசன், சமந்தா, நயன்தாரா கூட இந்த அளவிற்கு சம்பளம் திடீரென உயர்த்தவில்லையே . அவர்களின் சம்பளமே இப்போதுதான் முறையா 1.30 முதல் 2 கோடியாகியுள்ளது. இவருக்கு 2 கோடியா என கேள்வி எழுந்தது மட்டுமல்லாமல், தற்போது மீண்டும் ’குயின்’ ஹீரோயின் யார் என்ற கேள்விக்கு தேடுதல் தொடர்கிறது என்றே தகவல்கள் வந்துள்ளன.

0 comments:
Post a Comment