Monday, March 23, 2015


உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரரும், தேசிய விருது பெற்ற நடிகருமான சாருஹாசன் எழுதிய ஆங்கில புத்தகம் ஒன்று நேற்று மாலை சென்னையில் வெளியிடப்பட்டது.

சாருஹாசன் ஆங்கிலத்தில் எழுதிய 'திங்கிங் ஆன் மை ஃபீட் (Thinking on my feet) என்ற புத்தகம் நேற்று மாலை சென்னை கேகே நகரில் உள்ள டிஸ்கவர் புக் பேலஸில் நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவின் போது பேசிய சாருஹாசன் தன்னுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டதோடு வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சுவாரசியமான முறையில் பதிலளித்தார்.


சாருஹாசன் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச்சிறந்த ஒரு வழக்கறிஞருமாகவும் உள்ளவர். தனது வழக்கறிஞர் மற்றும் சினிமா தொழிலில் சந்தித்த சில சுவையான அனுபவங்களையும் தனது பேச்சின்போது கூறினார். இந்த நிகழ்ச்சியில் சாருஹாசனின் மனைவி கோமளம், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சுரேகா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

நடிகர் சாருஹாசன் உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மூன்று முகம், விக்ரம், வேதம் புதிது, தளபதி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருடைய மகள் சுஹாசினியும் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment