
நடிகர்கள்... ரசிகர்கள்... இருவரில் யார் புத்திசாலி என்றால் சந்தேகமில்லாமல் ரசிகர்கள்தான். இதை கடந்த காலங்களில் பல சம்பவங்களில் நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் கூட அப்படியொரு சம்பவம்... சில தினங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் திடீரென ட்விட்டரில் ரசிகர்களிடம் உரையாட முன் வந்தார். திடீர் அறிவிப்பாக இருந்தாலும் பல ரசிகர்கள் ஆர்வத்தோடு சிவகார்த்திகேயன் உடன் உரையாட வந்தனர். அப்படி அவர் ரசிகர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு ரசிகர், “உங்களுக்கு பிடித்த ஹாலிவுட் படம் எது?” என்று கேட்டார். அதற்கு சிவகார்த்திகேயன் சற்றும் யோசிக்காமல், 3 இடியட்ஸ் என்று பதில் அளித்தார். அது பாலிவுட் படமாச்சே, என்று ரசிகர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
அதிலும் ஒரு ரசிகர் “3 இடியட்ஸ் எப்ப ஹாலிவுட் படமாச்சு?” என்று கிண்டலாகக் கேட்டேவிட்டார். “படத்த சைலண்ட்ல வச்சுட்டு சப்டைட்டில்ல பார்த்தப்ப ஆச்சு” காமெடியாக அதற்கு சிவகார்த்திகேயன் பதில் அளித்தார். தவறுதலாக பதில் சொல்லிவிட்டு அதை காமெடியாக மாற்றியது சிவகார்த்திகேயனின் சமாளிபிகேஷன்தான் என்று ஃபேஸ்புக், ட்விட்டரில் சிவகார்த்திகேயனை வறுத்தெடுக்கின்றனர் ரசிகர்கள். இது ஒரு பக்கம் இருக்க, காக்கி சட்டை படமும் வெளியாகிவிட்டது.... அந்தப் படத்துக்கு இப்போது பப்ளிசிட்டியும் தேவையில்லை... பிறகு ஏன் திடீரென ட்விட்டருக்கு வந்து ரசிகர்களிடம் சிவகார்த்திகேயன் அன்பு செலுத்துகிறார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் ரெஸ்ட்டில் இருப்பதால் ரஜினி முருகன் படப்பிடிப்பு கேன்சலாகிவிட்டது. அதனால் சும்மா இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதனால்தான் ட்விட்டரில் ரசிகர்களை சந்திக்க வந்தாராம்.
ஓ... கதை அப்படி போகுதா?
0 comments:
Post a Comment