Thursday, March 12, 2015

உலக நாயகன் பாராட்டில் சூப்பர் ஸ்டார் வசனத்தில் கதம் கதம் - Cineulagam
கதம் கதம்...முடிந்தது முடிந்து விட்டது என பாபா படத்தின் சூப்பர் ஸ்டாரின் மெயின் பன்ச் இது தான். இதையே டைட்டிலாக வைத்து நாளை வெளிவரவிருக்கும் படம் தான் கதம் கதம். இப்படத்தில் பாலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ்+ தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் நந்தா இணைந்து கலக்கியுள்ளனர்.
பாபு தூயவன் இயக்கத்தில் அப்பு மூவிஸ் தயாரிப்பில் இப்படத்திற்கு தாஜ் நூர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டரைலர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து யு-டியுபில் நல்ல வரவேற்பு பெற்றது.
ஒரே கோட்டில் இரண்டு மன நிலை உள்ள இளைஞர்கள் பற்றிய கதை தான் இந்த கதம் கதம். நந்தா பொறுப்பான போலிஸ் அதிகாரியாக இருக்க, எதற்கும் கவலை கொள்ளாமல் ஜாலி, கேலி, அரட்டை என இருப்பவர் நட்ராஜ். இவர்கள் இருவரையும் இணைக்கும் ஒரே விஷயம் இவர்கள் பணிபுரியும் போலிஸ் வேலை தான்.
மிகவும் துடிப்பாக எதிரிகளை பந்தாட வேண்டும் என்று நினைக்கும் நந்தா, எதையும் மிகவும் கேஷ்வலாக ட்ரீட் செய்யும் நட்ராஜு என திரைக்கதை பின்னப்பட்டுள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசன், பாண்டியராஜ் போன்ற பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். 

0 comments:

Post a Comment