எல்லா காலத்திலும் லைம் லைட்டில் இருப்பது சாதாரண விஷயமல்ல. அது சிம்புவுக்கும் சரி, அவரது அப்பா டிஆருக்கும் சரி. எப்படியோ அமைந்துவிடுகிறது. சிம்பு நெகட்டிவ் என்றால் டி.ஆர் பாசிட்டிவ்! அவரைப்பற்றி அதிகம் பிரச்சனைக்குரிய செய்திகள் வந்ததில்லை. இருந்தாலும் டி.ஆரை பற்றி வர்ணிக்கும் எல்லாரும் எடுத்த எடுப்பிலேயே டண்டணக்கா என்று சொல்வதை வழக்கமாக கொண்டிருப்பதால், டி.ஆர் தன் தாடி முடியெல்லாம் பொசுங்குகிற சூட்டில் பதிலளித்திருக்கிறார்.
என்னய்யா டண்டணக்கா? கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்னு பாட்டு எழுதியிருக்கேன். இது குழந்தை பாடும் தாலாட்டுன்னு எழுதியிருக்கேன். வசந்த காலங்கள் இணைந்து பாடுங்கள்னு எழுதியிருக்கேன். ஆனால் எதுவும் உங்க காதுல விழல… இந்த டண்டணக்காதான் விழுந்திருச்சா? என்று கொதித்திருக்கிறார். ஆனால் அதே டண்டனக்காவை பல்லவியாக கொண்டு ஒரு பாடலை ரோமியோ ஜுலியட் படத்தில் வைத்திருக்கிறார்கள். பாடலுக்கு இசை.டி.இமான். மற்ற பாடல்கள் சுமார் என்றாலும், இந்த டண்டணக்காதான் கொலகுத்து! டங்காமாரி பாடலை எழுதிய ரோகேஷ்தான் இந்த பாடலையும் எழுதியிருக்கிறார். படத்தை லக்ஷமண் இயக்கியிருக்கிறார்.
பாடல் வெளிவந்த நாளில் இருந்தே கடுப்பாகி கண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் அஜீத் விஜய் ரசிகர்கள். ஏன்யா… ஊர்ல நான் இவரோட ரசிகன்னு சொல்லிக்க இரண்டு பெரிய ஹீரோக்கள் இருக்காங்க. இந்த ஜெயம் ரவி என்னன்னா நான் டி.ஆரோட ரசிகன்னு சொல்லி பேட்டியெல்லாம் கொடுக்கிறாரு என்பதுதான் அந்த கடுப்ஸ். இது ஒருபுறமிருக்க, எங்க டி.ஆரை எப்படி கிண்டல் பண்ணலாம் என்று அவரது ரசிகர்களும் ஜெயம் ரவிக்கு எதிராக கொடி பிடிக்கிறார்களாம்.
இதையெல்லாம் காதில் கேட்டு கவலையுற்ற ஜெயம் ரவி, இன்று ஒரு அறிக்கையே வெளியிட்டு விட்டார். அதில், ‘ரோமியோ ஜூலியட் படத்தில் நான் டி.ஆரின் ரசிகனாக நடித்திருக்கிறேன். அவரது தன்னபிக்கையும், எதுவும் என்னால் முடியும் முயற்சி செய்து பார்..இதுவும் முடியும் இதுக்கு மேலும் முடியும் என்கிற அவரது தன்னம்பிக்கை தான் என் கதாப்பாத்திரத்தின் இன்ஸ்பிரேசன். அதனால் தான் அவரது எவர்கிரீன் வரிகளான “ டண்டணக்கா” என்கிற வரிகளையும், அவரையும் சேர்த்து இந்த பாடலில் பதிவு செய்து இருக்கிறோம். எந்த ஒரு வரிகளிலும், வார்த்தைகளிலுமே அவரை குறைவாகவோ குறிப்பிடவில்லை. அவரை பெருமை படுத்தும் விதமாகவே பாடல் உருவாக்கப் பட்டுள்ளது.
நான் எப்போதுமே எந்த விதமான கருத்து மோதல்களிலும் சிக்கியதில்லை. எங்க அப்பா, அம்மாவுக்கு எப்படி செல்லப் பிள்ளையாக இருக்கிறேனோ அதே மாதிரியே எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாக இருக்க ஆசைப் படுகிறேன். அதனால் தயவு செய்து இந்த பாடலை யாரும் ரீமிக்ஸ் செய்து தன்னம்பிக்கை தமிழனான டி.ஆர் அவர்களை புண்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
.jpg)
0 comments:
Post a Comment