தற்போது உள்ள திரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவமுள்ள கதைகள் வருவதே அபூர்வமாக உள்ளது. 2, 3 பாடல்களில் மட்டும் நடிகைகளை யூஸ் பண்ணி வருகிறார்கள்.
சில நடிகைகள் இயக்குனர்களிடம் பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய காட்சிகளிலும் நடிக்க வையுங்கள் என்றுக் கேட்டு கொண்டு வருகின்றனர். ஆனால் சமந்தா மட்டும் வேறு ரூட்டில் சென்று ரசிகர்களை கவர முடிவு செய்துள்ளாராம்.
அதாவது, எந்த படமாக இருந்தாலும் 3 பாடல்களிலாவது நடனமாட வேண்டும் என்று கேட்டு வாங்கி நடிக்கிறாராம். தெலுங்கு சினிமாவில் தனது நடனத்தின் மூலமே பெருவாரியான ரசிகர்களை மயக்கி வைத்துள்ளார். தமிழிலும் இதே திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறாராம் சமந்தா.
அந்த வகையில் கத்தி, அஞ்சான் படங்களிலேயே கவர்ச்சியான நடனத்தின் மூலம் பல ரசிசகர்களை இழுத்து விட்டார். மேலும் நடனத்தை மையாக கொண்ட கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் சமந்தாவிடம் உள்ளதாம்.
0 comments:
Post a Comment