Sunday, March 22, 2015

 டப்பிங் பேசியே தீருவேன் : அடம் பிடிக்கும் அஞ்சலி
சித்தியுடனும், இயக்குனர் களஞ்சியத்துடனும் ஏற்பட்ட மோதலையடுத்து தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றார் அஞ்சலி. போன வேகத்தில் மளமளவென படங்களில் நடிக்க முயன்றார். ஆனால் எதிர்பார்த்தளவுக்கு பட வாய்ப்பு குவியவில்லை. பலுப்பு, மசாலா, கீதாஞ்சலி என 3 படங்களில் மட்டுமே வாய்ப்பு வந்தது. இதில் அப்செட் ஆனவர் மீண்டும் தமிழில் நடிக்க முடிவு செய்தார். அப்பா டக்கர், மாப்ளே சிங்கம் என 2 படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தீர ரானா விக்ரமா கன்னட படத்தில் நடிக்கிறார். இப்படம் வெளியானால் தனக்கு கன்னடத்தில் நிறைய படங்கள் வரும் என்ற கனவில் இருக்கிறார். அதற்காக தன்னை தயார்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இப்படத்துக்கு தானே சொந்த குரலில் டப்பிங் பேச முடிவு செய்திருக்கிறார். 

இதுபற்றி அஞ்சலி கூறும்போது,‘முதன்முறையாக கன்னட படத்திற்கு டப்பிங் பேசுகிறேன். இம்மொழியில் ஒரு வார்த்தைகூட எனக்கு தெரியாது. ஆனால் இப்படத்தின் மூலம் டப்பிங் பேசும் பகீரத முயற்சியை மேற்கொண்டு சாதித்துகாட்டுவேன்'  என்றார். மொழியே தெரியாமல் டப்பிங் பேச முடிவு செய்திருப்பது விபரீத முயற்சி. இப்போதைக்கு அந்த எண்ணத்தைகைவிட்டு மொழியை நன்றாக கற்றுக்கொண்டு அடுத்தடுத்த படங்களில் டப்பிங் பேசு என நெருக்கமானவர்கள் அஞ்சலிக்கு அட்வைஸ் கூறுகிறார்களாம். அவரோ அதை கண்டுகொள்ளாமல் நான் ஒரு தடவை சொன்னா.... பாணியில் பஞ்ச் டயலாக் பேசி வாயடைத்து விடுகிறாராம்.

0 comments:

Post a Comment