வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு. அதோடு நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியில் நட்சத்திர வீரராக வலம் வருகிறார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின் போது விஷ்ணுவுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சை மூலம் அவருடைய வலது கையில் மெட்டல் பிளேட் வைக்கப்பட்டது. பிளேட் வைத்த கையோடு 2014ம் ஆண்டு நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது அந்த மெட்டல் பிளேட் இன்று மருத்துவமனையில் நீக்கப்பட்டது. விஷ்ணுவிற்கு சிகிச்சை பார்த்த அதே மருத்துவமனையில்தான் ஷாலிக்கு சில தினங்களுக்கு முன் இரண்டாவது குழந்தையின் பிரசவம் நடைபெற்றது. விஷ்ணுவிற்கு மெட்டல் பிளேட் நீக்கப்பட்டதை அறிந்த அஜித், உடனே விஷ்ணுவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இதுகுறித்து விஷ்ணு டுவிட்டரில், அஜித் வந்து என்னை பார்த்தது நலம் விசாரித்தது எனக்கும் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அஜித் ஒரு எளிமையான இனிமையான மனிதர்’ என்றார்.




0 comments:
Post a Comment