Sunday, March 22, 2015

டைட்டில் பிரச்சனையால் உச்சக்கட்ட கோபத்தில் கவுண்டமணி - Cineulagam
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் என்றும் தவிர்க்க முடியாதவர் கவுண்டமணி. இவர் நடிப்பில் கடைசியாக ஜக்குபாய், பொள்ளாச்சி மாப்பிள்ளை படங்கள் வந்தது.
இதன் பின் உடல்நலக்குறைவால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் 49-ஓ.
இப்படத்தை தொடர்ந்து இவர் ’வேறு எங்கும் கிளைகள் கிடையாது’என்று ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பை வேறு ஒருவரும் பதிந்து வைத்துள்ளாராம். இதை அறிந்த கவுண்டமணி மிகுந்த கோபம் அடைந்து விட்டாராம்.

0 comments:

Post a Comment