உலக நாயகன் கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்' பல தடைகளை வெற்றிகரமாக கடந்து வரும் மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஏரியாக்களை கைப்பற்றுவதில் விநியோகிஸ்தர்களிடையே கடும் போட்டிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை, கோவையை அடுத்து அதிக வசூல் தரக்கூடிய முக்கிய பகுதியான வட ஆற்காடு தென்னாற்காடு மற்றும் செங்கல்பட்டு பகுதிகள் அடங்கிய NSC ஏரியாவின் உரிமையை பிரபல நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் கைப்பற்றியுள்ளது. இதே தேதியில் வெளியாகும் ஐஸ்வர்யா தனுஷின் 'வை ராஜா வை' படத்தையும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்தான் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மே 1ஆம் தேதி ரிலீஸாகும் இரண்டு பெரிய படங்களையும் ஸ்டுடியோ க்ரீன் வெளியிடுவதால் இவ்வருட மே தினம் இந்த நிறுவனத்தின் வெற்றி தினமாக கருதப்படுகிறது.
'உத்தம வில்லன்' படத்தின் NSC ஏரியாவை கைப்பற்றியதோடு மட்டுமின்று TK என்று சொல்லக்கூடிய கன்னியாகுமரி - திருநெல்வேலி பகுதி ரிலீஸ் உரிமையையும் ஸ்டுடியோ க்ரீன் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி மேனன், ஊர்வசி, ஜெயராம், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், நாசர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.
0 comments:
Post a Comment