உலக நாயகன் கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்' திரைப்படம் பல தடைகளை தகர்த்து எறிந்து வரும் மே 1ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள 'பாபநாசம் மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து ஒருசில மாதங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கு தயாராகிவிட்டார்.
கடந்த சில வாரங்களாக மொரீஷியஸ் நாட்டிற்கு சென்று லொகேஷன் பார்ப்பது முதல் படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த கமல்ஹாசன் வரும் மே மாதம் 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு 'ஒரே இரவு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
அறிமுக இயக்குனர் ராஜேஷ் இயக்கவுள்ள இந்த படத்திற்கு கமல்ஹாசன் நடித்த மூன்று படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்த ஜிப்ரான் இந்த படத்திற்கும் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ள இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனமே பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.
0 comments:
Post a Comment