Thursday, April 30, 2015

தன் திருமணம் குறித்து மீண்டும் சர்ச்சை கருத்து கூறிய ஸ்ருதி - Cineulagam
ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் பாலிவுட் படமான கப்பர் இஸ் பேக் படம் நாளை வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் திருமணத்திற்கு முன் நான் குழந்தை பெற்று கொள்ள ஆசைப்படுகிறேன் என ஸ்ருதி கூறியதாக பெரிய சர்ச்சை கிளம்பியது. பின் அந்த சர்ச்சைக்கு அவரே நான் அப்படி கூறவில்லை என முற்று புள்ளி வைத்தார்.
தற்போது ஒரு பேட்டியில் ‘எனக்கு சரியான துணை கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன், இல்லையெனில் கடைசி வரை திருமணம் செய்யாமலேயே இருந்து விடுவேன்’ என்று கூறியுள்ளாராம்.

0 comments:

Post a Comment