கமல்ஹாசன் முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ள படம் உத்தம வில்லன். ஆண்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கி இருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் மற்றும் லிங்குசாமி இணைந்து தயாரித்துள்ளனர். வருகிற மே 1ம் தேதி இப்படம் உலகம் முழுக்க ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைத்துள்ள ஜிப்ரான் நமக்கு அளித்த பேட்டி இதோ...
விஸ்வரூபம்-2, உத்தமவில்லன், பாபநாசம் இந்த மூன்று படத்திற்கும் என்னை நம்பி, என் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் எனக்கு வாய்ப்பு கொடுத்த கமல் சாருக்கு நன்றி. நான் இப்போது தான் வளர்ந்து வரும் இசையமைப்பாளர். ஆனால் எனக்கு அவர் கொடுத்த படங்கள் எல்லாம் பெரிய படங்கள். உத்தம வில்லனை பொருத்தமட்டில், 8ம் நூற்றாண்டில் உள்ள இசைக்கும், 21ம் நூற்றாண்டில் உள்ள இசைக்கும் பின்னப்பட்ட இசை என்று சொல்லலாம். அந்தக்கால இசை கருவிகள் குறிப்பாக யாழ் போன்றவை இன்றைக்கு பயன்பாட்டிற்கே இல்லை. ஆனால் இதுபோன்ற கருவிகள் இந்தோனேசியா போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன. இதை கமல் சார் கண்டுபிடித்து, இந்தப்படத்தில் பயன்படுத்த வாங்கி கொடுத்தார். அதை படம் மற்றும் பாட்டுகளில் பயன்படுத்தியுள்ளோம்.
7 பாட்டுக்குமான ரீ-ரெக்கார்டிங் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அந்த ஆடியோ சிடியே நிரம்பி வழிவது போன்று இருக்கும். கமல் சார் இசையை இந்தப்படத்தில் சொல்ல வைத்துள்ளார். பாட்டு ஒரு பக்கம், மியூசிக் ஒரு பக்கம், திடீரென ஒரு கேரக்டர் பேசுவது... போன்று வித்தியாசமாக இப்படத்தில் பயன்படுத்தியுள்ளோம். பல வெளிநாட்டு படங்களில் இதுபோன்று பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் தமிழ்படங்களுக்கு இது புதிதாக இருக்கும். நான் சின்ன இசையமைப்பாளர் தானே என்று இல்லாமல், என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை கொடுத்தார். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே வர வழைத்து பாடல்களை உருவாக்க வைத்தார்.
சில பாடல்களுக்கு சங்கதியே வராமல் இருக்கும். ஆனால் கமல் சாரிடம் டியூன் கொடுத்து நிறைய பயிற்சி எடுத்து இந்தப்படத்தில் பாடியிருக்கிறார். ஒரு நடிகனாக காம்பரமைஸ் இல்லாமல் படத்திற்காக தனது முழு பங்களிப்பையும் கொடுத்துள்ளார். இந்தப்படத்தை எல்லோரையும் போல நானும் காண ஆவலாய் இருக்கிறேன். ஒரு தேர்வு எழுதியது போன்று உள்ளது. இந்தப்படத்தில் நான் சுதந்திரமாக வேலை பார்த்துள்ளேன். இப்போது எனக்கான பொறுப்பு அதிகரித்துள்ளது. அவருடன் நானும் பயணிப்பது சந்தோஷமாக இருக்கிறது.
Home
»
cinema
»
cinema.tamil
»
jibran
»
kamal
» என்னை நம்பி வாய்ப்பு கொடுத்தார் கமல் - ஜிப்ரான் பேட்டி!
Wednesday, April 29, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment