Tuesday, April 28, 2015


விஜய்க்கு விருது கொடுக்காததிற்கு கத்தி படமே தான் காரணமா? - Cineulagam

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கத்தி. இப்படத்தில் விஜய்யின் மாஸ்+கிளாஸ் என கலக்கியிருந்தார்.

சமீபத்தில் நடந்த விருது விழாவில் கண்டிப்பாக சிறந்த அல்லது மக்கள் விரும்பும் நடிகர் இதில் ஏதாவது ஒன்றில் விஜய்க்கு விருது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

மேலும் பலரும் ஜீவானந்தம் கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகர் விருது கூட கிடைக்கலாம் என கூறினர். ஆனால், இறுதியில் தனுஷிற்கு கொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. கத்தி படத்திற்கு விருது கொடுத்தாலும், விஜய்க்கு ஏன் கொடுக்கவில்லை என பல கேள்விகள் எழுந்தது.

இதற்கு முக்கிய காரணம் படத்தில் விஜய் பல இடங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சுட்டிக்காட்டுவார். இவை பெரும்பாலும் விருது நடத்திய தொலைக்காட்சியை தான் சொல்கிறார் என பலருக்கும் படம் பார்க்கும் போதே தெரிந்தது. இதன் காரணமாக தான் விஜய்க்கு கொடுக்கவில்லை என புது சர்ச்சை கிளம்பியுள்ளது.

0 comments:

Post a Comment