Tuesday, April 28, 2015

ஸ்ருதியின் குத்தாட்டத்தால் சமரசம் ஆன தயாரிப்பாளர்

நாகார்ஜுனா படத்திலிருந்து திடீரென்று விலகிய ஸ்ருதி மீது அப்பட நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. ஸ்ருதி மீதான வழக்கு திடீரென வாபஸ் பெறப்பட்டது ஏன் என்பதுபற்றி கோலிவுட்டில் தகவல் பரவி உள்ளது. அதில் கூறப்படுவது:கார்த்தி-நாகார்ஜுனா படத்தில் நடிக்க சம்மதிக்கும்போது ஸ்ருதி பிஸியாக இல்லை. அதன்பிறகு அவருக்கு இந்தியிலிருந்து நடிக்க அழைப்பு வரவே கார்த்தி படத்திலிருந்து விலகினார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நடந்தபோது சமரச பேச்சுவார்த்தையும் நடைபெற்றதாக தெரிகிறது. 

அதன்படி வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ. 10 லட்சத்தை திருப்பி தருவது. காஸ்டியூம் செலவிற்காக ரூ.8 லட்சம் செலவானதால் அதையும் சேர்த்து ரூ.18 லட்சம் திருப்பி தந்தால் வழக்கு வாபஸ் பெறப்படும் என்று பட கம்பெனி சார்பில் கூறப்பட்டதாம். அதற்கு ஸ்ருதி சம்மதிக்கவே வழக்கும் ்வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இந்த தொகையை பணமாக தருவதற்கு பதில் அடுத்து அந்நிறுவனம் தயாரிக்க அனுஷ்கா நடிக்கும் படத்தில் குத்தாட்டம் ஆடித் தருவதாக கூறி இருக்கிறாராம். அதில் சமரசம் ஆன தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெற்றாராம். கால்ஷீட் தர மறுத்த ஸ்ருதி மீது தயாரிப்பாளர் அவ்வளவு கோபப்பட்டாரே என்று சிலர் கேள்வி எழுப்பியபோது சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா என்று பதில் வந்தது.

0 comments:

Post a Comment