Monday, April 27, 2015

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நோர்வே தமிழ் திரைப்பட விருது  விழா - Cineulagam
தமிழ் திரைப்படங்களை கௌரவிக்கும் விதமாக வருடா வருடம் நோர்வே யில் தமிழ் திரைப்பட விருது விழா நடைபெறும். இந்த வருடம் நேற்று மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து திரை பிரபலங்களான நடிகை குயிலி , இயக்குனர் கௌரவ் மற்றும் வசந்த பாலன் நோர்வே விருது விழாவை பற்றி பல நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதில் இயக்குனர் வசந்த பாலன் நேற்று கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசினார், அவர் பேசுகையில் "எங்கே காவிய தலைவனுக்கு சரியான அங்கிகாரம் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்தேன், எனது நாட்டில் கிடைக்காத அங்கிகாரம் கடல் கடந்து இருக்கும் இந்த நோர்வே விருது விழாவில் கிடைத்துள்ளது. எனது படைப்புக்கு ஆறு விருதுகள் கொடுத்து கௌரவ படுத்தியுள்ளனர், அவர்களுக்கு என்றுமே நன்றி கடன் பட்டு இருக்கிறேன் என்று கூறினார்.
மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட நோர்வே நாட்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் நிகழ்ச்சி முழுவதையும் கண்டு ரசித்தனர்.

0 comments:

Post a Comment