Tuesday, April 28, 2015


வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடித்துள்ள மாஸ் படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியான இரண்டே நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வரும் மே முதல் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தீம் இசை உட்பட மொத்தம் ஆறு பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஒரே ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் தமன் இசை வடிவம் கொடுத்துள்ளார்.
இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் தற்போது மும்பையில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது. திட்டமிட்டப்படி அனைத்து பணிகளும் முடியும் பச்சத்தில் படம் வரும் மே 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment