Wednesday, April 29, 2015

இருதினங்களுக்கு முன்னர் உலகையே உருக்கிய ஒரு சம்பவம் நேபாளம் நாட்டில் நிகழ்ந்த மிகப்பெரிய பூகம்பம். இந்த பூகம்பந்தால் இதுவரை சுமார் 5000 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நேபாளம் நாட்டில் நிகழ்ந்த பூகம்பத்தின் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்தது. இந்த பூகம்பத்தால் திரையுலகத்தை சேர்ந்த சிலரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தெலுங்கு நடிகர் விஜய் இந்த பூகம்பத்தில் பலியாகி இருக்கிறார். 

இந்நிலையில் தனுஷ் மீண்டும் வேல்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் டார்ஜ்லிங் பகுதியில் நடந்து வருகிறது. பூகம்பம் நடந்த அன்று தனுஷ், எமிஜாக்சன் உள்ளிட்ட படக்குழுவினர் ஷூட்டிங்கை முடித்துவிட்டு டார்ஜ்லிங்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஓய்வெடுத்துள்ளனர். அப்போது அங்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதில் ஹோட்டல் கட்டடம் உள்ளிட்டவைகள் லேசாக குலுங்கின. இதை உணர்ந்த தனுஷ், எமி ஜாக்சன் உள்ளிட்ட படக்குழுவினரோடு, அந்த ஹோட்டலில் தங்கியிருந்த அனைவரும் அலறியடித்து கொண்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தனர். பாடல் காட்சிகளை முடித்துவிட்டு தனுஷ், எமி உள்ளிட்ட படக்குழு இன்று இரவு சென்னை திரும்ப இருக்கின்றனர்.

0 comments:

Post a Comment