Thursday, April 30, 2015

விஜய், அஜித்தை ஓரங்கட்டிய மணிரத்னம் - Cineulagam
தமிழ் சினிமாவில் யார் பாக்ஸ் ஆபிஸ் கிங் என எப்போதும் விஜய், அஜித்திற்கு தான் போட்டி, இவர்களின் படங்களுக்கு அமெரிக்காவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
கடந்த வருடம் வெளியான கத்தி திரைப்படம் அங்கு மாபெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனை படைத்தது, அதை தொடர்ந்து என்னை அறிந்தால் படமும் நல்ல வசூல் செய்தது.
ஆனால், எந்த நடிகர் பலமும் இல்லாமல் மணிரத்னம் படம் என்ற ஒரே காரணத்திற்காக இப்படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்படம் கத்தி மற்றும் என்னை அறிந்தால் ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்ததாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment