Tuesday, April 28, 2015



மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தின் சிறப்பு காட்சியை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்த பின்னர், இயக்குனர் மணிரத்னத்தை அழைத்து தனக்குரிய பாணியில் என்னவொரு படம் மணி  என பாராட்டியதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோரது நடிப்பையும் பி.சி.ஸ்ரீராம், ஏ.ஆர்.ரகுமான் அவர்களது பணிகளையும் ரஜினி வெகுவாக பாராட்டியுள்ளாராம். இதேபோன்று மற்ற இந்திய பிரபலங்களான ராம் கோபால் வர்மா, அமிதாப் பச்சன் ஆகியோரும் இப்படத்தை பார்த்து இயக்குனர் மணிரத்னம் அவர்களை பாராட்டியுள்ளனர். இதனால் மணிரத்னம் மகிழ்ச்சியில் உள்ளாராம்.

மணிரத்னம் தயாரித்து இயக்கியுள்ள இப்படம் அமெரிக்காவில் கத்தி, என்னை அறிந்தால் படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. மேலும் இன்று இப்படம் கோச்சடையானின் வசூல் சாதனையை முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment