எனது மகள் சினிமாவில் நடிக்கப் போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. அது வெறும் வதந்தியாக்கும் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். சச்சினுக்கு சாரா என்ற மகள் உள்ளார். தற்போது 18 வயதாகும் சாரா, பாலிவுட் படத்தில் சாகித் கபூர் ஜோடியாக நடிக்கப் போவதாக கடந்த சிலதினங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. ஊடகங்களிலும் இந்த செய்தி அடிபட்ட நிலையில் சாரா சினிமாவில் நடிக்க மாட்டார் என சச்சின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ள சச்சின், எனது மகள் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் சினிமாவில் நடிக்கிறார் என்று வெளியான செய்தி முற்றிலும் ஊக அடிப்படையிலானது என்று கூறியுள்ளார். திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்து வரும் சாராவை, கிரிக்கெட் போட்டிகளின் போது சச்சினுடன் பார்க்க முடியும். சச்சின் ஓய்வு பெற்ற பிறகுதான் சாராவை அவ்வளவாக கிரிக்கெட் மைதானங்களில் காண முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
»Unlabelled
» சினிமாவிலா? என் மகளா? சச்சின் டெண்டுல்கர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமேன்..
Monday, April 27, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment