Thursday, April 30, 2015

திரு இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தில் டாப்ஸி ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படத்தில் டாப்ஸிக்கு அக்காவாக சோனியா அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வலியவன்' படத்திற்குப் பிறகு ஜெய் ‘புகழ்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், ‘தீராத விளையாட்டு பிள்ளை', ‘சமர்', ‘நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய திரு இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா முதலில் ஒப்பந்தமானார். பின்னர் சில பிரச்சனைகள் காரணமாக அப்படத்திலிருந்து விலகிய த்ரிஷாவிற்கு பதில் நடிகை டாப்சி ஒப்பந்தமாகியுள்ளார். அவரை வைத்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.

ஜெய்க்கு அண்ணனாக பிரபு தேவாவும், டாப்ஸிக்கு அக்காவாக சிம்ரன் நடிப்பதாகவும் இருந்தது. அதுவும் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சிம்ரன் தற்போது தயாரிப்பு நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளார். எனவேதான் அக்காவாக நடிக்க ஒத்துக் கொண்ட படத்தில் இருந்து அவர் விலகியதாக தெரிகிறது.

எனவேதான் சிம்ரன் நடித்த அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சோனியா அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகை சோனியா அகர்வால் நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு ஜோடியாக ‘பாலக்காட்டு மாதவன்' படத்தில் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment