Monday, April 27, 2015



என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜித், சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படம் தல56 என்று அழைக்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, நேற்று சத்தமே இல்லாமல் ரகசியமாக தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இதுவரை இந்த தகவல் படத்தரப்பால் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல் அஜித், இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தாரா என்பது குறித்த தகவலும் வெளிவரவில்லை.

அஜித் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment