Tuesday, April 28, 2015


தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. அதைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் பாயும்புலி படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து வருபவர், சமுத்திரகனி நடிக்கும் ராவா படத்திலும் நடிக்கிறார்.


இதையடுத்து, மேலும் சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. இவரிடத்தில் தமிழ் சினிமாவில் உங்களை அதிகம் கவர்ந்து ஹீரோ யார்? என்று கேட்டால், துளியும் தாமதிக்காமல் தல அஜித் என்கிறார்.


நான் தமிழ் படத்தில் நடிக்க கமிட்டானபோதில் இருந்தே அஜித்தின் பல படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். அதில் ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் ஆகிய படங்கள் எனக்கு ரொம்ப பிடித்து விட்டன. இப்போதுகூட படம் பார்க்க வேண்டும் போல் இருந்தால் என்னை அறிந்தால் படத்தைதான் பார்க்கிறேன். அந்த வகையில் அந்த படத்தை மட்டும் இதுவரை நான் 20 தடவை பார்த்திருக்கிறேன்.


அந்த அளவுக்கு அஜித் தனது நடிப்பால் என்னை கொள்ளை கொண்டு விட்டார். அதன்காரணமாகவே அவருடன் எப்படியாவது டூயட் பாடி விட வேண்டும் என்கிற ஆசை எனக்குள் அலைமோதத் தொடங்கியிருக்கிறது. அதனால், எதிர்காலத்தில் அஜித் நடிக்கும் புதிய படங்களில் நடிக்க முயற்சி எடுப்பேன் என்கிறார் ஐஸ்வர்யா தத்தா.

0 comments:

Post a Comment