Wednesday, April 1, 2015

Raai Laxmi Cute Galleryவிஜய் நடித்த 'கத்தி' படத்தை அடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது 'அகிரா' என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். தமிழில் ஹிட்டான 'மெளன குரு' படத்தின் இந்தி ரீமேக்கான இந்த படத்தில் அருள்நிதியின் கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹா நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.


இந்நிலையில் மெளன குரு படத்தின் மிகவும் முக்கியமான ஒரு கேரக்டர் உமா ரியாஸ் நடித்த போலீஸ் கேரக்டர். இந்த கேரக்டரில் நடிக்க தகுந்த நடிகையை பரிசீலித்த வந்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது அந்த கேரக்டருக்கு ராய்லட்சுமிய்யை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலிவுட்டில் ராய்லட்சுமி நடிக்கும் முதல் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற ஹிட் படங்களில் நடித்த ராய்லட்சுமி, பாலிவுட்டிலும் தனது முத்திரையை சிறப்பாக பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகிரா' படத்தில் நடிக்கவிருக்கும் தகவலை ராய்லட்சுமி உறுதிப்படுத்தியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் பாலிவுட் படத்தில் அறிமுகமாவதில் பெரும் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ள அவர் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியுள்ளார்.

அனிருத் இசையமைக்க இந்த படத்தில் பாலிவுட் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment