மங்காத்தா 2 எடுத்தால் தல-தளபதியோட தான் - மீண்டும் ரசிகர்களை சீண்டிப்பார்க்கும் வெங்கட்பிரபு
அஜித்-வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான மங்காத்தா படம் பெரிய வெற்றியைக் கண்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இதற்கு அஜித் பெர்மிஷன் குடுத்தால் போதும் உடனே ஷூட்டிங் தொடங்கிவிடுவேன் என்று பலவிதமாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபுவிடம் ரசிகர் ஒருவர் மங்காத்தா2 எப்போ எடுப்பிங்க என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, மங்காத்தா 2ம் பாகம் எடுத்தால் அஜித், விஜய்யை வைத்து தான் எடுப்பேன். இனி கடவுள் கையில் தான் உள்ளது என தெரிவித்திருக்கிறார்.
இதே போல் சில நாட்களுக்கு முன் அஜித், விஜய்யை வைத்து படம் எடுக்கப்போவதாகவும் அதில் விஜய்யை ஹீரோவாகவும் அஜித்தை வில்லனாகவும் நடிக்க வைப்பதாக செய்திகள் வெளியானது, இதுகுறித்து அஜித் வில்லனா என்று கூட சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் புலி படத்தை முடித்து விட்டு அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். அஜித், சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
0 comments:
Post a Comment