
விஜய்யின் புலி படத்தை தொடர்ந்து ஸ்ருதி ஹாசன் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
இதன் முதல் கட்டமாக சென்னையில் உள்ள பின்னி மில்லில் செட் அமைத்து அஜித், லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படப்பிடிப்பு நடத்தினர். அடுத்த கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாசன் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் தங்கையாக நடிப்பதற்காக பல்வேறு நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் யாரும் ஒப்புக் கொள்ளாத நிலையில், லட்சுமி மேனன் ஒப்புக் கொண்டு அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தார்.
ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் நாயகியாக நடித்தாலும் அவரை விட லட்சுமி மேனனுக்கு தான் ஸ்கோப் அதிகமாம். கதையில் வரும் பிரச்சனைகள் அனைத்தும் லட்சுமி மேனனை சுற்றிதான் உள்ளதாம். அவருக்காக அஜித்து போராடுவதுதான் படமாம். இதனால் தன் தோழிகளிடம் தல 56வது படத்தில் அஜித்திற்கு அடுத்தபடியாக எல்லாமே நான்தான் என்பது போல் கூறி பில்டப் கொடுத்து வருகிறாராம் லட்சுமி மேனன். லட்சுமி மேனனின் பேச்சால் ஸ்ருதி செம காண்டாகியிருக்கிறாராம்.
0 comments:
Post a Comment