இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் வரிசையில் ராஜமவுளி இணைந்து விட்டார், பல பிரமாண்ட படைப்புக்களை கொடுத்தவர் இவர். இதனால், இவரை இயக்குனர் ஷங்கருடன் ஒப்பிட்டு அனைவரும் பேசி வருகின்றனர்.
ஆனால், ராஜமவுளி சமீபத்தில் பாகுபலி பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதற்கு விளக்கம் அளித்தார். இதில் ‘தயவுசெய்து ஷங்கருடன் என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அவர் இந்திய சினிமாவிற்கு பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்தவர். ஷங்கருக்கு அடுத்தபடியாக நான் இருக்கிறேன் என்று சொன்னால்கூட, அதை நினைத்து நான் சந்தோஷப்படுவேன்.
ராஜமௌலிக்கு அடுத்து ஷங்கர் என்று சொல்வதை என்னால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment