தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவரால் தான் இந்த நிகழ்ச்சியின் TRP பல மடங்கு உயர்ந்தது.
ஆனால், இணையதளத்தில் இவரின் பிரபலமான ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’, ‘போலிஸ கூப்புடுவேன்’ போன்ற வசனங்கள் கிண்டலுக்கு உள்ளானது. ஒரு கட்டத்திற்கு மேல் இவரின் இந்த வசனங்களே இந்நிகழ்ச்சிக்கு ஆபத்தாகியுள்ளது.
இவர்களை தேடி நியாயம் கேட்க வரும் குடும்பத்தினரை மிகவும் மிரட்டும் பாணியிலேயே லட்சுமி பேசியுள்ளார், அடிக்கடி போலிஸை கூப்பிடுவேன் என்று கூறுவதால், அந்த குடும்பத்தினர் பயந்து விடுகின்றனர். இதனால், முன்பு போல் யாரும் இந்த நிகழ்ச்சிகளுக்கு வருவது இல்லையாம். இதனால் தான் இவரை இதிலிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகின்றது.
என்னங்க மேடம் பிரச்சனை என்றால் போலிஸிடம் போகனும்ன்னு அவுங்களுக்கே தெரியாதா..உங்களிடம் நியாயம் கிடைக்கும் என்று வந்தால் நீங்களே போலிஸ கூப்பிடுவேன் என்று மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்.
0 comments:
Post a Comment