
தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என அனைவருக்கு தெரியும், ஆனால், தொழில் ரீதியாக இவர்களுக்குள் இருக்கும் போட்டி, ரசிகர்களுக்கு பெரிய பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.
இதை நேற்று மீண்டும் நிரூபிக்கும் படி டுவிட்டரில் அஜித்தை கிண்டல் செய்து சூர்யா+விஜய் ரசிகர்கள் #AjithFansAreBornMentalsஎன்ற டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர்.
இதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் #VijaySuriyaFansAreSlavesOfAjithFans என்ற டாக் கிரியேட் செய்து இவர்களும் போட்டிக்கு இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர். ஒரு நடிகரை புகழ்ந்து ட்ரண்ட் செய்வதில் எந்த தவறும் இல்லை, ஆனால், நேற்று இவர்கள் செய்த விஷயத்தை கண்ட மற்ற மாநிலத்தினர் குறிப்பாக வட இந்தியர்கள் மிகவும் கிண்டல் செய்து விட்டனர். தமிழகத்தில் இருக்கும் ஒரே பிரச்சனை விஜய், அஜித் தான் போல, இவர்களுக்கு வேறு ஏதும் பிரச்சனையாக தெரியவில்லை என்பது போல் சில வட இந்தியர்கள் டுவிட் செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment