Monday, June 8, 2015

இனிமே இப்படித்தான் படத்தில் அகிலா கிஷோர், ஆஷ்னாஜவேரி என்று இரண்டு நாயகிகள். இதன் படப்பிடிப்பில் அகிலா கிஷோர் ஒரு நாயுடன் நடிக்கும் காட்சி இருந்தது. நாய் பற்றி விளக்கமாகக் கூறி நடிக்க சொன்னபோது எனக்கு நாய் பற்றி எல்லாம் தெரியும். எங்கள் விட்டிலேயே நாலைந்து நாய் வளர்க்கிறோம்.நாய் சைகாலஜி எல்லாம் தெரியும். எனக்கு எதுவும் விளக்க வேண்டாம் என்று சொன்னாராம்.

காட்சியில் நடிக்க ஆரம்பித்ததும் நாய். கடித்துவிட்டது. நெருங்கிப் பழகுவது போல் நடித்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கடித்துவிட்டது. கொஞ்சுகிறது என்றால் நிஜமாகவே கடித்துவிட்டது.  அகிலா கிஷோர் பதறிவிட்டார். இருந்தாலும் ஊசி எல்லாம் போட்டு 10 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். யூனிட்டே எப்போதும் கலகலப்பு என்றிருக்குமாம். நாய் எங்கே கடித்தது என்று கேட்டுவிட்டு தொடையில் என்று கூறியதும் கொடுத்து வைத்த நாய் என்று அப்போதும் கலாய்த்தார்களாம். அடப் பாவிங்களா? நாயைவிட இதுதான் பெரிய கடி என்றாராம் அகிலா கிஷோர்.

0 comments:

Post a Comment