Sunday, June 7, 2015

மாரி பாடல்கள் எப்படி? ஒரு பார்வை - Cineulagam
தமிழ் சினிமாவில் நமக்கு பிடித்த கூட்டணி என ஒன்று இருக்கும், அப்படி ஒரு கூட்டணி தான் தனுஷ்-அனிருத். படத்தின் தயாரிப்பாளருக்கு செலவே வைக்காமல் பாடல் எழுதுவதில் ஆரம்பித்து பாடுவது வரை இரண்டு பேருமே செய்து முடித்து விடுவார்கள்.
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் 3, வேலையில்லா பட்டதாரி என இரண்டு மெகா ஹிட் பாடல்களை கொடுக்க, மாரிக்கு பற்றி விட்டது எதிர்ப்பார்ப்பு. இப்பாடல்கள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் கேள்விக்குறி தான்.
ஏனெனில் படத்தில் மொத்தம் 6 ட்ராக், இதில் ஒன்று தீம் மியூஸிக், மற்ற 5 பாடல்களிலுன் பெரும்பாலும் செம்ம Folk தான். காதல் பாடல்களில் கூட தாரை தப்பட்டை சவுண்ட் தான் அதிகம் கேட்கின்றது.
டங்காமாரி சாயலிலேயே ’தரலோக்கல்’ பாடல் உருவாகியுள்ளது, படத்தில் கேட்டதும் கவரும் பாடல் ‘டானு டானு’ என்ற டூயட் தான். மற்றப்படி ‘தப்பு தான், ‘ஒரு வித ஆசை’, ’பகுலு உடையும்’ ஆகிய பாடல்கள் சுமார் ரகம் தான். மொத்தத்தில் அனிருத்தின் திரைப்பயணத்தில் மாரி கொஞ்சம் சறுக்கல் தான்.

0 comments:

Post a Comment